"பத்து பைசா பிரயோஜனம் இல்லாதவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" - உதயநிதியை வெளுத்து வாங்கும் குஷ்பூ.!
"பத்து பைசா பிரயோஜனம் இல்லாதவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" - உதயநிதியை வெளுத்து வாங்கும் குஷ்பூ.!
![பத்து பைசா பிரயோஜனம் இல்லாதவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - உதயநிதியை வெளுத்து வாங்கும் குஷ்பூ.! பத்து பைசா பிரயோஜனம் இல்லாதவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - உதயநிதியை வெளுத்து வாங்கும் குஷ்பூ.!](https://kathir.news/static/c1e/client/83509/migrated/2b8a9351d0418fb593fc33343f573089.jpg)
சுயமாக சம்பாத்தியம் இல்லாமல், குடும்ப பணத்தை எடுத்து வாரி இரைத்து சினிமா தயாரித்து, ப்ளாப் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு ஒன்னும் போனியாகாததால் அரசியலில் குதித்தார். தனது தாத்தா முன்னாள் முதல்வராகவும், தந்தை முன்னாள் துணை முதல்வராகவும், முன்னாள் முதல்வரின் மகனாகவும் இருந்ததால், தங்களது குடும்ப கட்சியான தி.மு.க-வில் எடுத்த எடுப்பிலேயே தி.மு.க இளைஞரணி செயலாளர் என்கின்ற உச்சப்பதவி கொடுக்கப்பட்டு பட்டத்து இளவரசராக முடிசூடப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அரசியலுக்கு வந்த உதயநிதி வாய்க்கு வந்தபடி அனைவரையும் தான் ஏதோ சொந்த உழைப்பில் சாதித்து வந்தது போல அகங்காரத்துடன் பேசி வருவது தெரிந்ததே. அதேபோல, குஷ்பூ பா.ஜ.க-வில் சேர்ந்ததை குறித்தும் விமர்சனம் செய்து வந்தார். ஆனால், அதற்கு குஷ்பூவோ "தன் அப்பன் பெயர் இல்லாமல், ஒரு தனித்த அடையாளமே இல்லாமல் பத்து பைசாக்குக் கூட பிரயோஜனம் இல்லாமல் இருக்கும் ஒருவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று அதிரடியாக ட்வீட் செய்துள்ளார்.
I refuse to comment on a loser who is not worth a penny on his own without his father's name. 😊
— KhushbuSundar ❤️ (@khushsundar) October 28, 2020
இது நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், குஷ்பூ குறிப்பிட்ட தகுதியில் இருக்கும் ஒரே நபர் உதயநிதி ஸ்டாலின் தான் என்பது தெளிவாகிறது.