கொரோனா சூழலால் ரஜினியின் அரசியல் யுக்தி மாறலாம், ஆனால் பின்வாங்கமாட்டார் : ஆதரவாளர்கள் நம்பிக்கை.!
கொரோனா சூழலால் ரஜினியின் அரசியல் யுக்தி மாறலாம், ஆனால் பின்வாங்கமாட்டார் : ஆதரவாளர்கள் நம்பிக்கை.!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் 6 மாதங்களில் தேர்தல் என்ற நிலையில் கட்சிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. என்றாலும் கூட்டணி அமைப்பதில் அவைகள் தெளிவின்றி உள்ளனர். அதற்கு காரணம் சட்டசபை தேர்தலுக்கு முன் எனது அரசியல் வருகை இருக்கும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியிருந்தார். அவரின் நிலை குறித்து அறிந்து கூட்டணி பற்றிய முடிவுகள் எடுக்கலாம் என அவர்கள் ஒத்திவைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் அவர்களது பெயரில் கடந்த சில நாள்களாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தது. ரஜினி பெயரில் சமூக வலைதளங்ககள் மூலமாக பரப்பப்படும் அந்த அறிக்கையில்,
``என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடுகூட்டி, கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்''
ஆனால் , `` `என்னுடைய மருத்துவர்கள் என் உடல்நிலை பற்றிக் கூறுகையில் " கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்.
அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். என்று ரஜினிகாந்த் தெரிவிப்பதுபோல் அந்த அறிக்கையில் தகவல் இடம்பெற்றிருந்தது.
ஆனால் ரஜினி விசுவாசிகள் கூறுகையில் அவர் பெயரில் யாரோ வெளியிட்ட அறிக்கை இது என கூறுகின்றனர். ஏனெனில் பொதுவாக ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்தோ அல்லது அரசியலில் இறங்குவது குறித்து எடுத்த தீர்மானங்கள் குறித்தோ அவர் பிறர் மூலமாகவோ அல்லது மறைமுகமாகவோ இதுவரை சொன்னது கிடையாது. எதுவாக இருந்தாலும் நேரடியாக பத்திரிக்கையாளர்களை தனது வீட்டுக்கே வரவழைத்து வெளிப்படையாகக் கூறுவது வழக்கம். நிச்சயமாக இது தலைவரின் அறிக்கை இல்லை என்கின்றனர்.
ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒரு போதும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணமுள்ளவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் உண்டு, குறிப்பாக இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கும் இதில் விருப்பமில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. மேலும் தமிழ் உணர்வாளர்கள் என்கிற பெயரில் அமைப்புகள், இயக்கங்கள், கட்சி நடத்துபவர்களுக்கும் ரஜினியின் வருகை பிடிப்பதில்லை.
என்றாலும் அவர்கள் முகவரி இல்லாத அந்த அறிக்கையை நம்பி இதுதான் வாய்ப்பென ரஜினியை ஒரு குழப்பக்காரர் என வருணித்தனர். அவர் வரவே மாட்டார் என்றும் தங்களது ஆசையை மக்களிடம் திணிக்கும் வகையில் பேட்டி அளித்தும், எதிரான அறிக்கைகளும் கொடுத்து வந்தனர். உண்மையில் இந்த அறிக்கை தமிழகத்தில் ஒருவித பரபரப்பையும், அரசியலில் ஒரு மாற்றம் காணவேண்டும் என்று நினைத்தவர்களுக்கும் இடையே இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது உண்மை.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வமான ட்விட்டரில், ``என் அறிக்கைபோல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டுவருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்தின் இந்த அறிக்கை அவருடைய உடல்நிலை பற்றி மருத்துவர்கள் கூறியதாக வந்த அந்த முகவரியற்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
என்றாலும் ஒரு வெற்றிடத்தை நிரப்புவது குறித்தும், சிஸ்டத்தில் மாற்றம் வேண்டும் என்று கூறி அவர் அரசியலை நோக்கி அடி எடுத்து வைத்தார். அந்த நோக்கத்தில் இருந்து அவர் பின்வாங்கமாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிய அவர், அந்த இடத்தில் பொருத்தமான இளைஞர் வருவதை அவர் வரவேற்று ஏற்கனவே வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவ்வாறு அவர் பேசியதற்கு காரணம் அப்போதும் அவருடைய உடல்நிலைதான், இப்போதும் தனது உடல்நிலையே கரணம். ஆனால் ரஜினிகாந்த அவர்களது மனநிலை ஒரு தூய்மையான அரசியலைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான். அதற்காக அவர் ஊர் ஊராக வந்து பிரச்சாரத்தில் ஈடுபட தேவை இல்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை, எங்களுக்கு இந்த அரசியலை விட அவர்தான் முக்கியம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறுகையில் "ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம், அவர் பின்வாங்கப்போவதில்லை. ஒரு திரைப் படத்தின் பின்னணியில் மிக முக்கியமானவராக ஒரு இயக்குனர் எப்படி இருக்கிறாரோ அது போல அவர் தொலைவில் இருந்தபடியே இயக்குவார். அவருக்கும் அரசியல் நன்றாக தெரியும். ஆக இந்த தமிழகத்தில் அவர் மூலம் மாற்றம் நிச்சயம் என்று அடித்துக் கூறுகின்றனர்.