Kathir News
Begin typing your search above and press return to search.

தேவர் ஜெயந்தி விழாவிலும் தவறாமல் உளறிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் - தேவர் சமுதாயத்தை பற்றி உளறல்.!

தேவர் ஜெயந்தி விழாவிலும் தவறாமல் உளறிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் - தேவர் சமுதாயத்தை பற்றி உளறல்.!

தேவர் ஜெயந்தி விழாவிலும் தவறாமல் உளறிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் - தேவர் சமுதாயத்தை பற்றி உளறல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 3:07 PM GMT

வெற்றியாளர்களாக வலம் வரும் அரசியல்வாதிகள் அனைவருமே பேச்சில் திறன் வாய்ந்தவர்களாக இருந்தவர்கள் தான். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதனை பேச்சினால் தனக்கு சாதகமாக மாற்ற கூடிய திறமை அரசியல்வாதிகளுக்கே அதிகம் உண்டு. இங்கே சாதித்த அனைவருமே பேச்சில் திறன் வாய்ந்தவர்கள் தான். அதிலும் தி.மு.க வளர்ந்ததே பேசிதான். மேடைப்பேச்சு, வீதி கூட்டங்கள், மாநாடு, கண்டன ஆர்ப்பாடங்கள், சினிமா வசனங்கள், பத்திரிகை பேட்டிகள் என பேச்சினாலேயே வளர்ந்த கட்சி தி.மு.க மட்டுமே!

ஆனால் அதன் தற்போதைய தலைவர் ஸ்டாலினின் பேச்சுக்கள் மிகப்பிரபலம். அது நல்லா பேசுகிறார் என்பதனால் அல்ல நல்லா பேச முயற்சி செய்து, வராமல் உளறி வைப்பதில் ஸ்டாலினுக்கு நிகர் இல்லை இவ்வளவிற்கும் பேச்சு என்றாலே ஞாபகம் வரக்கூடிய கருணாநிதி அவர்களின் மகன் என கூறி மகுடம் சூட்டிக்கொண்டவர்.

இன்று அவர் பேச்சின் சிறப்பு அம்சமாக தேவர் சமுதாயத்தை குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளார். இன்று தேவர் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் என கருதப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது ஜெயந்திவிழா வெகு விமரிசையாக அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அனைத்து அரசியல் தலைவர்களும் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அவர்களுடன் இணைந்து முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் "முத்துராமலிங்க தேவர் அவர்கள் தேவர் சமுதாயத்தை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க பாடுபட்டார்" என வழக்கமாக உளறினார்.

அதாவது தேவர் சமுதாயம் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் குற்றப்பரம்பரை பட்டியலில் இணைக்கப்பட்டது. அதனை நீக்க பாடுபட்டது முத்துராமலிங்க தேவர் முக்கியமானவர் ஆவார். இதனை "குற்றப்பரம்பரை" என கூறுவதற்கு பதிலாக "குற்றப்பத்திரிகை" என வழக்கம்போல் உளறினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News