Kathir News
Begin typing your search above and press return to search.

நெற்றியில் விபூதி இல்லாமல் தேவரின் படத்தை பகிர்ந்த கனிமொழி - இந்துமத அடையாளங்களை அழித்து வேரறுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு.!

நெற்றியில் விபூதி இல்லாமல் தேவரின் படத்தை பகிர்ந்த கனிமொழி - இந்துமத அடையாளங்களை அழித்து வேரறுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு.!

நெற்றியில் விபூதி இல்லாமல் தேவரின் படத்தை பகிர்ந்த கனிமொழி - இந்துமத அடையாளங்களை அழித்து வேரறுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 5:25 PM GMT

இந்துக்கள் மற்றும் இந்துக்கள் மத அடையாளங்களை அழிப்பதில் தி.மு.கவுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை அல்லது இந்துக்களை மற்றும் இந்துமத அடையாளங்களை அழிப்பதனால் ஏதும் பயன் தி.மு.கவிற்கு இருக்குமா எனவும் தெரியவில்லை! அல்லது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதால் வேறு யாரையாவது சந்தோசப்படுத்த தி.மு.க நினைக்கிறதா என தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து இந்துக்களையும், இந்து மத சின்னங்களையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்துமத அடையாளங்களையும், இந்துமத சம்பிரதாயங்களையும் மதிக்காமல் அதனை மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் இந்து மதத்தை கேவலமாக சித்தரிப்பவர்களை ஆதரிக்கவும் தி.மு.க தவறுவதில்லை.

அந்த வகையில் இன்று பசும்பொன்.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அனைத்து அரசியல் தலைவர்களும் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க எம்.பி'யும், ஸ்டாலினின் தங்கையுமாகிய கனிமொழி இன்னு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார் அந்த பதிவுடன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் உருவப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடதக்க அம்சம் என்னவெனில் முத்துராமலிங்க தேவர் அவர்களின் அடையாளமே நெற்றி நிறைய விபூதியுடன் அவரின் தோற்றமே! "தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்று கொள்கையாக வாழ்ந்தவர். ஆன்மீகத்தை உயிராக நேசித்தவர், தேசத்தை சுவாசித்தவர். ஆனால் அவரையே இன்று நெற்றியில் விபூதி இல்லாமல் வெறும் நெற்றியுடன் அவரின் அடையாளமாகிய ஆன்மீகத்தை மறைத்து வீரத்தை மட்டும் நினைவு கூறி உள்நோக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்துக்கள் மீதும் ஆன்மீகத்தின் மீதும் எத்தகைய வெறுப்பு அரசியல் இருந்தால் இந்த செயலை கனிமொழி செய்திருப்பார். அந்தளவிற்கு இந்துக்கள் புனித சடங்குகள் மற்றும் அடையாளங்கள் மீது தி.மு.க'விற்கு ஆழ்ந்த வெறுப்பு தங்கியுள்ளது. இது அவர்களின் அனைத்து செயல்களிலும் வெளிப்படுகிறது.

ஏற்கனவே திருவள்ளுவர் புகைப்படத்தில் விபூதி மற்றும் அவரின் பூநூல் ஆகியவற்றை களைந்து புகைப்படம் பரப்பி இந்துக்கள் மத அடையாளங்களின் மீது வெறுப்பை உமிழ்ந்த தி.மு.க இன்று முத்துராமலிங்க தேவர் அவர்களின் விபூதியை களைந்து இந்து மத அடையாளம் இல்லாமல் ஒரு ஆன்மீகவாதியை மக்களின் முன் அடையாளத்தை மாற்ற நினைக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News