Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினின் 'விதி'யை எழுத துவங்கியுள்ள 'விபூதி'!

ஸ்டாலினின் 'விதி'யை எழுத துவங்கியுள்ள 'விபூதி'!

ஸ்டாலினின் விதியை எழுத துவங்கியுள்ள விபூதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2020 8:56 AM GMT

தமிழக அரசியல் தலைவர்களின் விதி சில முக்கிய காரணிகளால் மாற்றி எழுதப்பட்ட வரலாற்று உண்மைகள் அனைத்தும் தமிழக மக்கள் நன்கு அறிவர். காமராஜர் முதல்வராக இருந்தபொழுது வளர்ந்த திராவிடர் கழகம் மற்றும் அதன் கிளைக்கழகமான திராவிட முன்னேற்ற கழகத்தில் தந்திர அரசியல் புரியாமல் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய தனது முழுநேர அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டதால் விதியின் காரணமாக காமராஜர் தனது முதல்வர் பதவியை திராவிட கடவுள் மறுப்பு கொள்கை கட்சிகளுக்கு விட்டுகுடுக்க வேண்டியதாயிற்று.

அதன் பிறகு வந்த அண்ணாதுரை திறமை மிக்கவர், அவரின் ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்தை பற்றியே சிந்தித்து செயல்பட நேரம் ஒதுக்கியதால் தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் உழைத்ததால் விதி அவரை முதல்வர் பதவியில் இருக்கும்போதே உயிரை பறித்தது.

அதன் பிறகு கருணாநிதி அந்த முதல்வர் பதவிக்கு ஆசைப்படும்போது விதி அவரை எம்.ஜி.ஆரின் காலில் விழ செய்தது விளைவு எம்.ஜி.ஆரின் கட்டளைப்படி தி.மு.க-வினரால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல்வரானார் கருணாநிதி.

பின் தி.மு.க-வின் ஊழல்களை தட்டி கேட்ட காரணத்தால் விதி தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆரை பிரித்து முதல்வராக அரியணை ஏற வைத்தது. பின் இறக்கும் வரையிலும் எம்.ஜி.ஆர் முதல்வர்தான். அவரின் மரணப்படுக்கையிலும் கூட தமிழக மக்கள் அவரை முதல்வராக்க வாக்கு மழை பொழிந்தனர். தமிழக வரலாற்றில் படுத்துக்கொண்டே முதல்வர் ஆனவர் எம்.ஜி.ஆர் ஒருவரே.

அதன் பின் காட்சிகள் மாறின எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையில் அவருடன் நடிகையாக பயணித்த ஜெயலலிதாவை விதி முதல்வராக்கியது. பின் ஜெயலலிதாவும் இறக்கும் வரை முதல்வர்தான். இறந்த பிறகும் இன்றும் அவரது பெயரால்தான் ஆட்சி நடக்கிறது.

இப்படி தமிழக அரசியல் தலைவர்கள் வரலாற்றை விதி சில முக்கியமான காரணங்களால் மாற்றியிருக்கிறது. அப்படிப்பட்ட விதி இன்றும் ஒர் தலைவரை, அவரின் தலையெழுத்தை மாற்ற காத்திருக்கிறது.

'முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்' என்ற மு.க.ஸ்டாலின் இப்பொழுது வாரிசு என்ற காரணத்தினாலேயே இன்றைய தி.மு.க தலைவர் என்ற பொறுப்பில் அமர்ந்துள்ளார். ஸ்டாலினுக்கு 'விதி' 'விபூதி' வடிவில் வந்துள்ளது. ஆம் இந்துக்களின் மத அடையாளமான விபூதி ஸ்டாலினின் முதல்வர் கனவை தகர்க்க காத்துக்கொண்டிருக்கிறது.

தமிழக மக்களுக்கு ஓர் மனப்பான்மை உள்ளது அது என்னதான் ஒரு கட்சி தன் முந்தைய ஆட்சியில் ஊழலில் சிக்கி தன் பெயரை இழந்திருந்தாலும் அது எதிர்கட்சியாக இருக்கும் போது அதன் நடவடிக்கைகள் மற்றும் ஆளும் அரசுகள் மீதான சின்ன தவறுகள் கூட பெரிதாக மக்கள் மத்தியில் எண்ணப்பட்டு அடுத்த தேர்தலில் பாவம் இவர்களுக்கு ஓர் வாய்ப்பு மறுபடியும் தரலாமே இனி அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்ற ஒரு எண்ணத்தில் எதிர்கட்சியாக இருக்கும் கட்சியை மக்கள் ஆளும் கட்சியாக தனது வாக்குகள் மூலம் மாற்றியமைத்து விடுவார்கள். இதை கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்த வரலாறே கூறும்.

அந்த வகையில் ஆளும் அ.தி.மு.க அரசு கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் உள்ளது. இதன் நடவடிக்கைகளை விமர்சித்து அதில் சிலவற்றை திரித்து வெறுப்பை விதைத்து அதனை வாக்குகளாக அறுவடை செய்ய தி.மு.க காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை விதி 'விபூதி' வடிவத்தில் வந்து கலைத்து விளையாட தயாராகிவிட்டது.

ஆம் இந்துக்களின் பிரதான மத அடையாளமே விபூதிதான் அதனை அழித்து தான் இந்துக்களின் எதிரி என்ற கருத்தை அடிக்கடி மக்கள் மனதில் ஸ்டாலின் விதைப்பதன் மூலம் தனது முதல்வர் கனவு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருவதை ஸ்டாலின் உணரவில்லை.

இந்துக்களின் மத உணர்வை கொச்சைபடுத்துதல், மத அடையாளங்களை அழித்தல், மத சடங்குகளை கேவலப்படுத்தி பேசி அதில் இன்பம் காணுதல் என தி.மு.க இந்து மதத்தை அழிக்க காத்துகொண்டிருப்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கிவிட்டனர். இந்த ஒரு காரணத்தினாலேயே ஸ்டாலினின் முதல்வர் கனவு இந்துக்களால் தகர்க்கப்பட உள்ளது.

இந்துக்களை இந்துக்கள் என உணர வைக்கும் வேலையை ஸ்டாலின் மிகச்சிறப்பாக செய்கிறார். இதுநாள் வரையில் தான் ஒர் இந்து, தனது மதம் தான் தனக்கு அடையாளம், இந்து மதமே சிறந்த வாழ்க்கைமுறை, இந்து மதத்தை அழிப்பது வரலாற்றையும், வாழ்க்கை முறையையும் அழிப்பது என உணராத இந்துக்கள் கூட ஸ்டாலினின் இந்த செயல்கள் மூலம் உணரத்துவங்கிவிட்டனர். இன்று தான் திட்டமிட்டு திராவிட இயக்கங்களால் அழிக்கப்படுகிறோம் என ஒவ்வொரு இந்துவும் உணர துவங்கிவிட்டான்.

இதனை அவ்வபோது உணர்ந்து தி.மு.க தலைமை "இந்துக்களுக்கு நாங்கள் எதிரியல்ல, தி.மு.க-வில் இருப்பது 90 சதவீதம் இந்துக்கள்" என அலறியடித்தாலும் ஸ்டாலின் அவர்களின் செயல் இந்துக்கள் திராவிட கட்சிகளால் அழிக்கப்பட்டு வருவதை உணர்த்துகின்றன.

நேற்று கூட பசும்பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் குருபூஜையில் அவரின் ஆசியாக கருதப்படும் விபூதியை தரையில் கொட்டி 'தான் என்றைக்கும் இந்துக்களின் நண்பன் அல்ல இந்துக்களை அழிக்க காத்துக்கொண்டிருப்பவன்தான்' என ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

விபூதி சித்தர்களை உருவாக்கியுள்ளது, விபூதி சன்னியாசிகளை உருவாக்கியுள்ளது, கறை படிந்து திரிந்த மனங்களை ஆன்மீகத்தின் பக்கம் ஈர்த்துள்ளது, தன் வாழ்நாளில் ஓர் முறையேனும் விபூதி பூசாத இந்துக்கள் ஒருவன் கூட இங்கு இல்லை, கோவிலில் கூட அர்ச்சகர் தரும் விபூதியை பூசி மீதமிருப்பதை காலில் படாமல் தூண்களிலோ அல்லது கிண்ணங்களிலோ கொட்டிவிட்டு வருவது இந்துக்களின் பண்பாடு அப்படிப்பட்ட விபூதியை ஸ்டாலின் தரையில் கொட்டி தனது 'விதி'யை 'விபூதி'யின் கையில் குடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News