தன்னை 'ஓடிப்போன நாய்' என்று வருணித்த கமல்நாத்துக்கு ஜோதிராதித்யா சிந்தியா செம பதிலடி.!
தன்னை 'ஓடிப்போன நாய்' என்று வருணித்த கமல்நாத்துக்கு ஜோதிராதித்யா சிந்தியா செம பதிலடி.!
By : Kathir Webdesk
மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சில சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தொகுதிகளில் ஆளும் பாஜகவும், எதிர் கட்சியான காங்கிரசும் நீயா.. நானா.. யுத்தத்தை நடத்தி வருகின்றன. காங்கிரசில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா அனல் கக்கும் பிரச்சாரத்தை இங்கு செய்து வருகிறார், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான கமல் நாத் அத்தொகுதிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார்.
இந்த இடைத்தேதல் புதிதாக பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் கமல் நாத் ஜோதிராதித்யா சிந்தியாவின் செல்வாக்கை தடுக்க இது சரியான வாய்ப்பு என்ற வெறியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அசோக் நகர் தொகுதியில் அண்மையில் கமல்நாத் பிரச்சாரம் செய்கையில் " ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து ஓடிப்போன நாய்தான் " என ஆவேசமாக பேசினார். அவர் அவ்வாறு இழிவாக பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அசோக்நகர் மாவட்டம் ஷாடோராவில் நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பேரணியில் ஜோதிராதித்யா சிந்தியா பேசுகையில் " கம்லா நாத் அசோக்நகருக்கு வந்து என்னை ஒரு நாய் என்று கூறி இழிவுபடுத்த முயற்சிக்கிறார், ஆனால் அதுபோல எல்லாம் அவரை நான் பதிலுக்கு பேசமாட்டேன், ஆமாம், நான் நாய்தான் , ஏனென்றால் பொதுமக்கள் என் எஜமானர், நான் ஆர்வத்துடன் அவர்களுக்காக சேவை செய்கிறேன். அதே சமயம் மக்கள் பணத்தை திருட முயற்சிக்கும் திருடர்களை மீண்டும் திருட விடாமல் கடித்து குதறுவேன் " என்று பதிலடி கொடுத்துள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா இவ்வாறு பேசியதும் பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
https://www.opindia.com/2020/10/mp-bjp-leader-jyotiraditya-scindia-slams-kamal-nath-over-his-dog-jibe/