வெள்ளை கொடியுடன் டெல்லி வட்டாரத்தில் சுற்றி வரும் டி.ஆர்.பாலு - மடியில் கனத்துடன் ரெய்டு பீதியில் தி.மு.க தலைவர்கள்.!
வெள்ளை கொடியுடன் டெல்லி வட்டாரத்தில் சுற்றி வரும் டி.ஆர்.பாலு - மடியில் கனத்துடன் ரெய்டு பீதியில் தி.மு.க தலைவர்கள்.!

சமாதான கொடியை தூக்கியுள்ளது தி.மு.க, தொடர் வருமான வரித்துறை ரெய்டு மற்றும் அமலாக்கப் பிரிவின் சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போய் உள்ளது தி.மு.க. இதனை தொடர்ந்து டெல்லி வட்டாரங்களில் நன்கு பரிச்சர்யம் உடைய டி.ஆர்.பாலுவை தூதுவராக அனுப்பியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியான ரெய்டு பட்டியலில் தன் பெயர் அடுத்து இருக்குமோ அல்லது தன வீட்டுக்கு அடுத்து அமலாக்கப்பிரிவு ஆட்கள் வந்து நிற்பார்களோ என தி.மு.க தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான இடங்களில் எம்.பி தேர்தல் சமயத்திலும், அதன் பின்னரும் வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் அடுத்தடுத்து சோதனைகளை நடத்தின. இதில் கணக்கில் வராத பணம் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டது.
அடுத்ததாக தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் முறைகேடான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்தது. பல கோடி ரூபாய் பெறுமதியான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதே போல் முறைகேடான வெளிநாட்டு முதலீடு குற்றச்சாட்டிற்கு ஆளான தி.மு.க துணை பொதுச் செயலாளர் பொன்முடியின் மகனும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களையும் அமலாக்க பிரிவு முடக்கியது. இந்த இருவருமே தி.மு.க'வில் அபரிமிதமான செல்வாக்கில் உள்ளவர்கள்.
கடந்த வாரம் கோவை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையா கவுண்டருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மத்திய அமைப்புகளின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தி.மு.க பிரமுகர்கள் ஆடிப்போய் உள்ளனர்.
ஏற்கனவே மக்கள் மத்தியில் ஊழல் கட்சி, கோடி கோடியாய் அனைவருமே சேர்த்து வைத்துள்ளனர் என்ற பெயர் தி.மு.க'விற்கு உள்ளது. இந்த நிலையில் இப்படி ரெய்டுகளில் கட்டு கட்டாக பணம் வேறு மாட்டுவது தி.மு.க'வின் நல்லவர்கள் என்ற முகமூடியை கிழிப்பதாக உள்ளது. இதனால் மக்களிடம் ஓட்டு கேட்டு எப்படி செல்வது என்ற மனநிலையில் தி.மு.க தலைவர்கள் பம்மியபடி உள்ளனர்.
இந்த நிலையில் "எங்கள் மீது ரெய்டுகளை குறைத்துக்கொள்ளுங்கள், தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் மத்திய அரசு எதிர்ப்பை குறைத்து கொள்கிறோம் என வெள்ளை கொடியுடன் டி.ஆர் முகாமிட்டுள்ளதாக தகவல். ஆனால் மத்திய அரசோ செவி சாய்க்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.