Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க தலைமைக்கு 'அல்வா' கொடுக்கும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் - கட்சி மாற யோசிக்கும் நெல்லை நிர்வாகிகள்.!

தி.மு.க தலைமைக்கு 'அல்வா' கொடுக்கும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் - கட்சி மாற யோசிக்கும் நெல்லை நிர்வாகிகள்.!

தி.மு.க தலைமைக்கு அல்வா கொடுக்கும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் - கட்சி மாற யோசிக்கும் நெல்லை நிர்வாகிகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Nov 2020 5:29 PM GMT

தி.மு.க'வின் உட்கட்சி பூசல் தேர்தல் நெருங்க நெருங்க உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளது. அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க'வினரை தோற்கடிக்க மற்ற கட்சியினர் தேவையில்லை தி.மு.க'வினரே உட்கட்சி பூசலால் தங்கள் கட்சியினரை தாங்களே தோற்கடித்து விடுவார்கள் போல, அந்தளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது தி.மு.க உட்கட்சி பூசல்.

நெல்லை மாவட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் மாவட்டச் செயலாளராக இருந்த காலம் முதல், இங்கு பல கோஷ்டிகள் உண்டு. அதிலும் 2 எம்.எல்.ஏ சீட்டுகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற அடிப்படையில் நெல்லை மாவட்ட தி.மு.க பிரிக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க தகிக்கிறது.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாவட்டச் செயலாளராக இருக்கும் நெல்லை கிழக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதில் ஒன்றை தி.மு.க வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரகாம் பெல்லிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இவருக்கு போட்டியாக நெல்லை சிட்டிங் எம்.பி ஞானதிரவியமும் குழி பறிப்பதாக கூறுகிறார்கள் நெல்லை உடன்பிறப்புகள்.

போதாக்குறைக்கு ஏற்கனவே ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்காகவும், நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்காகவும் 'ஸ்டாலினின் கிச்சன் கேபினட்'டில் பெரும் தொகையைக் கொடுத்தவர் இந்த கிரகாம் பெல்.

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மீது ஏகப்பட்ட புகார்களை கட்சியினரே தலைமைக்கு அனுப்பி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரையும் எடுத்தெறிந்து பேசும் கொஞ்சம் முரட்டு ஆசாமி இவர். தலைமை பலமுறை கூப்பிட்டு எச்சரித்தும் இவர் திருந்தவில்லை. ஆனாலும் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற விஷயம்தான் வஹாபுக்கு கேடயமாக உள்ளது. இதே மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு நபரை வஹாபுக்கு பதிலாக நியமிக்கலாமா? என்கிற கோணத்திலும் தலைமை கணக்கு போட்டு வருகிறது.

நெல்லை மேற்கு மாவட்டத்திலோ மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், வர்த்தக அணி மாநிலத் துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கும் இடையே ஆரம்பம் முதலே கடும் போட்டிதான். 4 எம்.எல்.ஏ சீட்டுகளை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றை தனக்கு அளிக்கும்படி தலைமையிடம் அய்யாதுரை பாண்டியன் வலியுறுத்த, அதற்கு வேண்டாம் என தடை போடுகிறாராம் சிவபத்மநாபன். அவ்வப்போது போஸ்டர் யுத்தம் வேறு நடந்து வருகிறது.

இதையெல்லாம் கேள்விபட்டு தலைமையின் உத்தரவின் பேரில் முதன்மைச் செயலாளர் நேரு அண்மையில் நெல்லைக்குச் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்ல, ஒரு கட்டத்தில் நேரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டாராம். 14 எம்.எல்.ஏக்கள் கொண்ட மாவட்டத்திற்கு செயலாளராக இருந்தவன் நான். கடைசியில் வெறும் 4 எம்.எல்.ஏக்கள் கொண்ட மாவட்டத்திற்கும் செயலாளராக இருந்தேன். தலைமை முடிவு பண்ற விஷயங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்'' என கறாராக பேசிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார் நேரு.

நேருவின் அஸ்திரமும் பொய்த்த நிலையில் கட்சி தலைமை அறிவாலயத்திற்கு அனைவரையும் அழைத்துள்ளதாம். இதனால் கண்டிப்பாக கட்சி தாவல்கள் கண்டிப்பாக இருக்கலாம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News