Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ஏழைகள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

தமிழகத்தில் ஏழை சாதி இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும், ஏழைகளுக்கு நிலம் வாங்கி அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏழைகள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 March 2021 11:58 AM IST

தமிழகத்தில் ஏழை சாதி இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும், ஏழைகளுக்கு நிலம் வாங்கி அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து இலுப்பூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: அடுத்த மாதம் 1ம் தேதி முதல் (ஏப்ரல்) விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழு தள்ளுபடி. மேலும், பெண்களின் பணி சுமையை குறைப்பதற்காக அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என கூறினார்.

மேலும், கிராமங்களில் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். இடம் இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி கான்கிரிட் வீடு கட்டித்தரப்படும். ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News