முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத்தாக்கல்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உட்பட பல்வேறு கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதனை தொடர்ந்து நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.