Kathir News
Begin typing your search above and press return to search.

'தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை' என்ற எடப்பாடி - 'அது திராவிட மாடல்' என மடை மாற்றிய ஸ்டாலின்

தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்ற எடப்பாடி - அது திராவிட மாடல் என மடை மாற்றிய ஸ்டாலின்
X

ThangaveluBy : Thangavelu

  |  4 May 2022 6:07 PM IST

தமிழக சட்டமன்றத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ., நத்தம் விஸ்வநாதன் அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் என்பவர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும்போது மட்டும் தீபாவளிக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்வது இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் அவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் கூச்சல், குழப்பம் நீடித்தது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இது கொள்கை முடிவு இதில் யாரையும் நிர்பந்திக்க முடியாது என்றார். அப்போது குறுக்கிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ., பேசியதில் எவ்வித தவறும் இல்லை. முதலமைச்சர் என்பவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். எனவே தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்ற கேள்வியை ஸ்டாலினுக்கு எழுப்பினார். இதனால் மீண்டும் பேரவையில் பரபரப்பான சூழலே நிலவியது.

இந்த கேள்வியால் பயந்துபோன முதலமைச்சர் ஸ்டாலின், எங்கள் கூட்டணி மதசார்பற்ற கூட்டணி, இதனால் மதசார்பற்ற அரசே தமிழகத்தில் நடைபெறுகிறது. ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியாக தி.மு.க. என்று சித்தரிக்கப்படுகிறது. எனவே யாருக்கும் அடிபணிய மாட்டோம். இது பெரியார் வழித்தடத்தில் அண்ணா உருவாக்கிய கட்சி, கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் திராவிட மாடல் என்று பேச்சை மடைமாற்றினார். வழக்கம்போல் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இந்து பண்டிகைகளுக்கு மட்டும் தொடர்ந்து தெரிவிக்காமல் இருப்பதை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள்.

Source, Image Courtesy: Asianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News