Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு செல்போனில் வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.!

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம் பிடித்தார். இதற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்வு என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு செல்போனில் வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.!

ThangaveluBy : Thangavelu

  |  8 July 2021 6:36 AM GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. அதில் புதிதாக தேர்வு 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. இதற்கு அயராது உழைத்த பெருமை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சென்றடையும். இவர் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரது தோல்வி தமிழக பாஜக தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.


இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம் பிடித்தார். இதற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்வு என்றும் கூறப்படுகிறது. மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை, மீன்வளத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலமாக மத்திய அமைச்சர் எல்.முருகனை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News