Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்கு குடும்ப சுற்றுலா சென்றிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்கு குடும்ப சுற்றுலா சென்றிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ThangaveluBy : Thangavelu

  |  27 March 2022 11:57 AM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பததாக சொல்கிறார்கள். ஆனால் துறைசார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மட்டும் சென்றிருந்தால் அது சரியாக இருக்கும். ஆனால் ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலாவாகத்தான் பார்க்கப்படுகிறது.

முடியும் தருவாயில் உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியை தமிழ்நாட்டின் சார்பில் அரங்கம் அமைத்து துவக்கி வைப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. நான் வெளிநாடு சென்றிருந்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் வெளிநாடு சென்றபோது துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். வெளிநாட்டுக்கு பயணம் மட்டும் செய்யவில்லை அதற்கான வளர்ச்சித் திட்டங்களையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamil

Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News