கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த நடிகை நமீதா.!
கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் நல திட்டங்களை இந்த தொகுதிக்கு சேர்த்தவர் வானதி சீனிவாசன்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை நமீதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து தொகுதி முழுவதும் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் நல திட்டங்களை இந்த தொகுதிக்கு சேர்த்தவர் வானதி சீனிவாசன்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்? இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்த வானதி சீனிவாசனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அப்படி நீங்கள் வெற்றிபெற வைத்தால், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் உங்கள் இல்லம் தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.