Begin typing your search above and press return to search.
கோவையில் அ.தி.மு.க. போஸ்டர்களை கிழித்த போலீசார்! சி.சி.டி.வி. காட்சியில் அம்பலம்!
கோவையில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ரோந்துப்பணியில் இருந்த போலீசார் கிழிப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

By :
தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் அச்சடித்து முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்தது. இதனிடையே கோவையிலும் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அது போன்ற போஸ்டர்கள் சில இடங்களில் கிழிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், கோவையில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ரோந்துப்பணியில் இருந்த போலீசார் கிழிப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரத்தினபுரி பகுதியில் இரவுநேர ரோந்துப் பணியில் இருந்த போலீசார் இரண்டு பேர், அதிமுக போஸ்டர்களை கிழித்துவிட்டு செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: PolimerTv
Next Story