கோவையில் பரபரப்பு: ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும்போது வேலூர் இப்ராஹிம் கைது.!
கோவையில் பரபரப்பு: ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும்போது வேலூர் இப்ராஹிம் கைது.!
By : Kathir Webdesk
ராமர் கோயில் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவைக்கு நிதி திரட்ட வந்த வேலூர் இப்ராஹிமை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராஹிம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக கோவைக்கு வந்திருந்தபோது செட்டிபாளையம் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வேலூர் இப்ராஹிம் கூறுகையில், மத நல்லிணக்கத்திற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். இதனால் சில பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலிசார் தன்னை கைது செய்துள்ளனர். பிரிவினை வாதிகளை ஒடுக்குவதற்கு பதிலாக தன்னை கைது செய்துள்ளனர். நான் மீண்டும் வெளியில் வந்து ராமர் கோயிலுக்காக நிதி திரட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்துக்கோயில் கட்டுவதற்காக ஒரு இஸ்லாமியர் நிதி திரட்டி கைதாகியது இந்துக்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் இப்ராஹிமை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இந்துக்கள் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.