கோவை டூ டெல்லி.. பாஜக தேசிய மகளிரணி தலைவராக இன்று பொறுப்பேற்கும் வானதி சீனிவாசன்.!
கோவை டூ டெல்லி.. பாஜக தேசிய மகளிரணி தலைவராக இன்று பொறுப்பேற்கும் வானதி சீனிவாசன்.!

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் டெல்லியில் இன்று காலை பொறுப்பேற்கிறார். டெல்லியில் வானதி சீனிவாசன் பொறுப்பு ஏற்கும் நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என பாஜக தலைமை தகவல் கூறியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் 1970ம் ஜூன் மாதம் பிறந்தவர் ஆவார். இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். பாஜக கட்சியில் இணைந்த வானதி சீனிவாசன், 1993ம் ஆண்டு முதல் அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இவர் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
தற்போது தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணியின் அகில இந்திய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பலரது பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது.
இந்நிலையில், வானதி சீனிவாசன் டெல்லியில் தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். இவர் அரசியல் பிரமுகர் மட்டுமின்றி மூத்த வழக்கறிஞர் என்பது கூடுதல் செய்தி. இவரை தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்தார்.
தமிழகர்களை தொடர்ந்து பாஜக பெருமைபடுத்தி வருகிறது. இதற்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து கவுரவித்தது. அதே போன்று பலருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.