Kathir News
Begin typing your search above and press return to search.

உதவி கேட்ட மாணவரை துடைப்பத்தால் அடிப்பேன் எனக் கூறிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.!

கேரளாவில் உதவிக்கேட்ட மாணவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., முககேஷ் சரமாரியாக திட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது.

உதவி கேட்ட மாணவரை துடைப்பத்தால் அடிப்பேன் எனக் கூறிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 July 2021 10:21 AM IST

கேரளாவில் உதவிக்கேட்ட மாணவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., முககேஷ் சரமாரியாக திட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது.

மலையாள நடிகரும், கொல்லம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முகேஷ் உள்ளார். இவருக்கு செல்போன் மூலமாக மாணவர் ஒருவர் உதவி கேட்டுள்ளார். அப்போது தன்னுடைய போன் நம்பரை தந்தது யார் என கேட்க, நண்பர் கொடுத்தார் என மாணவர் பதில் அளிக்கிறார். ஆத்திரமடைந்த முகேஷ், அந்த நண்பனை அடிக்க வேண்டும்.


உன்னோட தொகுதி எம்.எல்.ஏ., யார் என்று சொல்லு என கேட்கிறார். அதற்கு மாணவர் தனக்கு தெரியாது என கூறுகிறார். கோபமடைந்த முகேஷ், எம்.எல்.ஏ., பெயர் தெரியான உன்னை துடைப்பத்தால் அடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா முழுவதும் இந்த ஆடியோ குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ குறித்து பேசிய முகேஷ், இது காங்கிரஸ் கட்சியின் சதி என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News