புகார் மனு அளித்தவர்கள் கோட்டைக்குள் வரலாம்! பொய் என்றாலும் ஒரு அளவு வேண்டாமா ஸ்டாலின் அவர்களே?
புகார் மனு அளித்தவர்கள் கோட்டைக்குள் வரலாம்! பொய் என்றாலும் ஒரு அளவு வேண்டாமா ஸ்டாலின் அவர்களே?
By : Mohan Raj
தேர்தல் பிரச்சாரத்தில் தங்கள் கட்சி வெற்றி பெற சில பொய் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி தெளிப்பார்கள் என் கேள்விபட்டிருக்கிறோம் ஆனால் பொய்யை அதிகமாக அள்ளி வீசுவார்கள் என தி.மு.க'வின் தேர்தல் பிரச்சாரத்தை பார்த்தால் தெரிகிறது. அதிலும் குறிப்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுவதெல்லாம் கனவிலும் கூட நடக்காத விஷயங்களாக உள்ளது.
அந்த வகையில் சிவகங்கையில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், "புகார் மனு வழங்கிய அடையாள அட்டையை கோட்டைக்குள் கொண்டு வரலாம்" என பொய்யை அள்ளி வாரி இறைத்துள்ளார்.
சமீப பத்து நாட்களாக தி.மு.க பிரச்சாரத்தில் புகார் பெட்டி என்ற ஒன்றை கொண்டு வந்து மேடையில் வைத்து அதுல் போடப்படும் புகார் மனுக்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பரிசீலித்து தீர்வு காண்போம் என வாக்குறுதி தந்து வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அதில் பெறப்படும் புகார் மனுக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதாக தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள N. வைரவன்பட்டியில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், "தி.மு.க ஆட்சி வந்தவுடன் 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றும், புகார் மனு வழங்கிய அடையாள அட்டையை கோட்டைக்குள் கொண்டு வரலாம்" என்றும் வாக்குறுதிகள் அள்ளி வீசி பிரச்சாரத்தை செய்தார்.
ஒரு சிறு கணக்காக வைத்துக்கொள்வோமே இதுவரை பத்தாயிரம் மனுக்கள் தி.மு.க'வால் பெறப்பட்டு அதில் பத்தாயிரத்துக்குமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றால் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் பேர் கோட்டைக்குள் வர தயார் என்றால் அவர்களை முதல்வர் கோட்டைக்குள் அனுமதிக்க முடியுமா? என்னதான் பொய் பிரச்சாரத்தை அள்ளி வீசுவது என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா தி.மு.க'விற்கு?
ஒரு பாமரன் கூட இதனை யோசிப்பான்! மனு அளிக்கும் அனைவரையும் கோட்டையில் அனுமதிப்போம் என்பது என்ன ஒரு மூடத்தனமான பொய் பிரச்சாரம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டாம்?
இது போல் பல விமர்சனங்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் எழுந்து வருகின்றன.