5 ஏக்கர் அபகரிப்பு, பெண்களிடம் அத்துமீறல் - முழு வீச்சில் களம் காணும் தி.மு.க கவுன்சிலர்
5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தட்டி கேட்ட பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்.
By : Bharathi Latha
தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதற்காக பெண்கள் இருவர் ஒன்று சேர்ந்தால் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள். போலீசாரிடம் புகார் அளித்த பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தார். பிறகு தன் மீது போலீசாரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்த இரு பெண்களின் வீட்டில் நுழைந்து அவர்களிடம் அத்துமீற பார்த்திருக்கிறார். இதன் காரணமாக பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய தி.மு.க ஒன்றிய கவுன்சிலரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது மனு ஒன்றை அந்த பெண்கள் தாக்கல் செய்துள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ள சுத்தமழை கிராமத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிராமத்தில் அவருடைய மனைவி மற்றும் இரு மகள்கள் வசித்து வருகிறார்கள். வின்சனின் தம்பியும் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க கவுன்சிலரான இயேசு இரட்சகர் என்பவர் இவருடைய ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரிக்க பார்த்துள்ளார்.
பயிரிட வந்த வேலையாட்களை சட்டவிரதமாக மிரட்டி அந்த நிலத்தை தன்னுடைய பெயரில் பதிவு செய்து கொண்டார். சுமார் 5 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவருடைய பெயரில் தற்போது போலீசாரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புகார் மனுவை போலீசார் சரிவர கவனிக்கவில்லை. இதன் காரணமாக இவரை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு பெண்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளார்கள். இதனால் இந்த பகுதி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.
Input & Image courtesy: Hindu News