குற்றவியல் சதித்திட்டத்தின் சிண்டிகேட் ஆக மாறிய காங்கிரஸ் - பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த மத்திய அமைச்சர்.!
குற்றவியல் சதித்திட்டத்தின் சிண்டிகேட் ஆக மாறிய காங்கிரஸ் - பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த மத்திய அமைச்சர்.!
By : Bharathi Latha
வேளாண் சட்டங்களை முன்வைத்து அரசியல் செய்ததற்காக எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது. எனவே இது மற்ற தந்திரங்களை நாட ஆரம்பித்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் குற்றவியல் சதித்திட்டத்தின் சிண்டிகேட்டாக காங்கிரஸ் உருமாறி விட்டது" என்று கூறினார்.
அதிக காலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் விவசாயிகளுக்கு சீர்திருத்தங்களை கொண்டு வரத் தவறிவிட்டது எனும் குற்றச்சாட்டுகளையும் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். "விவசாயிகள், அவர்களின் நிலங்கள் அல்லது அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு பயனளிக்கும் சீர்திருத்தங்களை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அறிமுகப்படுத்தவில்லை" என்று அவர் கூறினார். காங்கிரசின் பிரச்சினை, கட்சி வென்டிலேட்டரில் உள்ளது என்பதே என நக்வி மேலும் கூறினார்.
இந்த நாட்டின் விவசாயிகளின் நலனுக்கு மோடி அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், விவாதங்களுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் நம்புகிறது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். "அவர்கள் இதை ஒரு அரசியல் வாய்ப்பாகவே பார்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி ஒருபோதும் வெற்றி பெறாது" என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அரசியல் தலையீட்டால், பிரச்சினை வேறு பக்கம் திரும்புவதாக போராடிக் கொண்டிருக்கும் விவசாய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.