சிதறுகிறதா தி.மு.க. கூட்டணி? கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்!
சிதறுகிறதா தி.மு.க. கூட்டணி? கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. ஆனால் சொல்லிக்கொள்கின்ற அளவிற்கு ஓட்டு வாங்கவில்லை. அதன் கட்சி தலைவராக உள்ள கமல்ஹாசனே தேர்தலில் போட்டியிடவில்லை.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கினால் அவரிடம் கூட்டணி வைத்து போட்டியிடவும் கமல் முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று கமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். மீண்டும் தனித்து போட்டியிட்டால் இந்த தேர்தலோடு நமது கட்சி காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒரு புறம் உள்ளது.
தி.மு.க கூட்டணியில் ஒரு வேளை கமல் இணைந்தால் ஊழல் பற்றி இவ்வளவு நாள் பேசிவிட்டு மீண்டும் அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளார் என மக்கள் கேள்வி எழுப்புவார்கள். விழுகின்ற ஓட்டுகளும் விழாமல் போய்விடும் என்று மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தகவலை கசியவிட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2ஜி பொறுத்த வகையில் 0 இழப்பு என நீதிபதியே கூறியுள்ளார். இது ஒரு கால்புணர்ச்சிக்காக போடப்பட்ட வழக்கு என கூறினார்.
மேலும், கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணியாக இருந்தாலும் கொள்கை வேறுபாடுகள் உள்ளது என கூறினார். ஏற்கெனவே புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என அக்கட்சியை சேர்ந்த எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் காங்கிரசை கழற்றிவிடுவதற்கு முதலில் புதுச்சேரியில் முன்னோட்டம் பார்த்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு வேளை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை என்றால், தனித்து போட்டியிடுவதற்கும் காங்கிரஸ் தயாரக உள்ளதாக கூறப்படுகிறது.
கமல் மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளை தனியாக பிரித்து போட்டியிடவும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. விரைவில் திமுக கூட்டணி உடையவும் வாய்ப்புள்ளது.