ரூ.35 லட்சம் பணம் மோசடி.. சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு பிடிவாரண்ட்.!
சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பணம் மோசடி செய்ததாக சென்னை எழும்பூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பணம் மோசடி செய்ததாக சென்னை எழும்பூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ரஞ்சன்குமார். இவர் முஸ்லீம் பிரமுகர் ஒருவரிடம் ரூ.35 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது எழும்பூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த பண மோசடி வழக்கை எழும்பூர் விரைவு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. ஆனால் இந்த வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தொடர்ந்து ரஞ்சன்குமார் புறக்கணித்து வந்தார். இதே போன்று இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ரஞ்சன்குமார் ஆஜராகவில்லை.
இதனால் கோபம் அடைந்த நீதிமன்றம், அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான பிடிவாரண்டையும் கடந்த 10ம் தேதி பிறப்பித்துள்ளது.தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் பிரமுகருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள் அனைவரும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டும். ஆள்கடத்தில், கொலை, கொள்ளை, பித்தலாட்டம் போன்ற சம்பவங்கள் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.