Top
Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தலில் படுதோல்வி அடைந்தும் உல்லாச பயணத்திற்கு சென்ற ராகுல் காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி!

தேர்தலில் படுதோல்வி அடைந்தும் உல்லாச பயணத்திற்கு சென்ற ராகுல் காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி!

தேர்தலில் படுதோல்வி அடைந்தும் உல்லாச பயணத்திற்கு சென்ற ராகுல் காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி!

By : Saffron Mom

  |  11 Nov 2020 8:47 AM GMT

பீகார் தேர்தல் முடிவுகள் நேற்று பின்னிரவில் வெளியாகி பா.ஜ.க கூட்டணிக்கு வெற்றி கிடைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. 15 வருட தொடர் ஆட்சிக்குப் பிறகு நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருப்பது எதிரணியினருக்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் தோல்வியடைந்ததை கொண்டாடி வந்தவர்கள், நேற்று நாடு முழுக்க நடந்த தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றதைக் கண்டு வாயடைத்துப் போயினர்.

பிஹாரில், பா.ஜ.க மிக சிறப்பாக, தாங்கள் போட்டியிட்ட 121 தொகுதிகளில், 74-ஐ கைப்பற்றி அதிக ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றது. பிரதமர் மோடி மீது பீகார் மக்களுக்கு இருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் பாராளுமன்றத் தேர்தல்களில் 40க்கு 39 தொகுதிகளை NDA கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதில் படுமோசமாக தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்கும். மகாகாத்பந்தன் கூட்டணியில் (MGB) 70 இடங்களை பெற்ற காங்கிரஸ் கடைசியில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை பெருமளவு குறைத்தது. காங்கிரஸ் தன்னுடைய கூட்டணிக் கட்சிகளையும் கீழே இழுத்து புதைகுழியில் தள்ளுகிறது என்ற அளவிற்கு காரசாரமான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் வேளையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த 52 தொகுதிகளில் ஏறத்தாழ 42 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது ராகுல்காந்தி பா.ஜ.கவின் நட்சத்திர வேட்பாளர் என்று பலரும் கிண்டலாக கூறுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் சற்றும் அசராமல் 'அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே' என்று எடுத்துக் கொள்வது போல் வழக்கமான தோல்விக்குப் பிறகு ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஜெய்சால்மருக்கு 'இளைப்பாற' சுற்றுலா கிளம்பி விட்டார். இவர் இன்று காலை 6.30 மணி அளவில் ஜெய்சால்மருக்கு ஒரு தனி விமானத்தில் வந்து இறங்குகிறார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வரவேற்பு எதுவும் அளிக்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளதாம். தகவல்களின்படி, ஜெய்சால்மருக்கு அவர் வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அங்கு சூர்யாகார் ஹோட்டலின் பைவ் ஸ்டார் வசதியுள்ள ஆடம்பரமான விடுதியில் அவர் தங்குவார் என்றும் கூறப்படுகிறது. இது அவர் நண்பர்களுடன் அவர் சென்றுள்ள உல்லாச பயணம் என குறிப்பிடப்படுகிறது.

இங்குதான் சென்ற வருடம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய எம்.எல்.ஏ-க்களை சச்சின் பைலட்டிடமிருந்து காப்பாற்றத் தங்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்கள் இளைப்பாறுதலுக்குப் பிறகு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை இங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த செய்தி காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பி உள்ளதாக கேள்வி. பீகார் தோல்வி காரணமாக, காங்கிரஸ் இனிமேல் தங்கள் உள்ளூர் கூட்டணிக் கட்சியுடன் அதிக இடங்களை பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது. இது அடுத்த தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம். தற்போதைய தலைவராக சோனியா காந்தி இருந்தாலும், பல காலத்திற்கு அவர் 'இடைக் காலத் தலைவராக' தொடர்வது ஏன் எனக் கேள்வி எழுப்பும் காங்கிரெஸ்க்காரர்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்படுகிறார்கள். யார் தான் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்பது எனத் தெளிவு இல்லை.

Next Story