போதை பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது!
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
By : Karthiga
பஞ்சாப் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால்சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான இவர் பல்வேறு விவகாரங்களில் முதல் மந்திரி பகவான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் 2015 -ஆம் ஆண்டில் தொடரப்பட்ட போதை பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைராவை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தலைநகர் சண்டிகிரில் உள்ள கைரா வீட்டுக்கு அதிகாலையில் சென்ற போலீசார் போதை பொருள் வழக்கில் உங்களை கைது செய்ய வந்துள்ளோம் என கைராவிடம் கூறினார் . அப்போது கைரா கைதுவாரண்டை காட்டும்படி கூறி போலீசருடன் வாக்குவாதம் செய்தார். இவை அனைத்தையும் மகன் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பினார். அதனை தொடர்ந்து கைராவே போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதை அடுத்து கைரா கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது .
மேலும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கைராவை கைது செய்யும் அளவுக்கு போதைப்பொருள் வழக்கில் எந்த வகையான விசாரணையை பஞ்சாப் காவல்துறை நடத்தியது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. எனினும் காங்கிரசின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறைத்துள்ள ஆம் ஆத்மி எம்.எல். ஏ கைரா மீதான நடவடிக்கை சட்டத்தின்படி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
SOURCE :DAILY THANTHI