Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த கமல்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்ச தொகுதியை ஒதுக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த கமல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 12:42 PM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்ச தொகுதியை ஒதுக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி மிகுந்த கவலையில் உள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்களது கூட்டணியில் வந்து சேருவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.




மனித நேய மக்கள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), விடுதலை சிறுத்தைகள் (6), இந்திய கம்யூனிஸ்ட் (6) கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஒருவழியாக நடத்தி முடித்துள்ளது திமுக.

ஆனால், மதிமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் குறித்து திமுக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News