Kathir News
Begin typing your search above and press return to search.

'கிறிஸ்தவ மிஷனரி இல்லைனா தமிழ்நாடு பீகார் போல மாறியிருக்கும்' - தி.மு.க'வின் கிறிஸ்துவ பாசம்

கிறிஸ்தவ மிஷனரி இல்லைனா தமிழ்நாடு பீகார் போல மாறியிருக்கும் - தி.மு.கவின் கிறிஸ்துவ பாசம்
X

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2022 7:19 AM GMT

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் மிகப்பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் அவர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பீகார் போன்று மாறியிருக்கும் என சபாநாயகர் அப்பாவு பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சபாநாயகர் அப்பாவு மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட அப்பாவு பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கிறிஸ்தவ பாதிரியார்கள், சிஸ்டர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பீகார் போன்று மாறியிருக்கும். நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் சிஸ்டர்கள் மட்டுமே. இந்த தி.மு.க., அரசை உருவாக்கியவர்களும் அவர்களே. மேலும் உங்களின் பிரார்த்தனைகளும், விரதமும் இந்த அரசாங்கத்தை உருவாக்கியது.

திராவிட மாடல் அரசுக்கும், சமூக நீதிக்கும் கத்தோலிக்க பாதரியார்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை. (கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்) உங்களது பிரச்சனைகளை உடனடியாக முதலமைச்சரிடம் கொடுத்தால் அவர் நடவடிக்கை மேற்கொள்வார். மாறாக மறுக்க மாட்டார். அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே காரணம் என்று முதலமைச்சருக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சர்ச்சையான வீடியோ தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க., துணை தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: 'இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா? தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ளும் உரிமையை அவர்கள் இழந்துவிட்டனர். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை இப்போது இது நிரூபித்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News