Kathir News
Begin typing your search above and press return to search.

"350 கோடி போச்சா?" பயத்தில் தி.மு.க.. என்ன கூறினார் பிரசாந்த் கிஷோர்.!

"350 கோடி போச்சா?" பயத்தில் தி.மு.க.. என்ன கூறினார் பிரசாந்த் கிஷோர்.!

350 கோடி போச்சா? பயத்தில் தி.மு.க.. என்ன கூறினார் பிரசாந்த் கிஷோர்.!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2020 1:00 PM IST

தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஓர் தனியார் நிறுவனத்தை நம்பி ஒரு அரசியல் கட்சியே இயக்குகிறது என்றால் அது தி.மு.க மட்டுமே, அதிலும் வரலாறு காணாத அளவிற்கு 350 கோடி ரூபாயை ஐ பேக் எனப்படும் அந்த தனியார் நிறுவனத்திற்கு கூலியாக குடுத்து ஊழலால் இழந்த தனது அரசியல் செல்வாக்கை தி.மு.க மக்கள் மத்தியில் மறைத்து விளம்பரப்படுத்த பீகாரில் இருந்து தமிழகம் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் தி.மு.க'வினர் வரும் தேர்தலில் தி.மு.க வெற்றிவாகை சூடும், தி.மு.க தலைவரின் வாழ்நாள் ஆசையான முதல்வர் கனவும் பலிக்கும் என கனவில் மிதந்து வரும் உடன்பிறப்புகளுக்கோ கடந்த பீகார் மாநில தேர்தல் சற்று கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஐ பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோரின் ட்விட்டர் பதிவு வேறு உடன்பிறப்புகளின் எண்ணத்தில் இடியை இறக்கியது போல் உள்ளது.

கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும், இந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார்.

இந்த தேர்தல் முடிவுகளை சற்றும் எதிர்பாராத தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் பிரசாந்த் கிஷோரிடம் தேர்தல் பணிகளை குடுத்துள்ளது குறித்த பயத்தில் தற்பொழுது வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "பா.ஜ.க'வால் பரிந்துரைக்கப்பட்ட முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள். முதல்வராக சோர்வடைந்த மற்றும் அரசியல் ரீதியாக இகழத்தக்க ஒருவரை முதல்வராக பெற்றுள்ள பீகார் மக்கள் இந்த மோசமான ஆட்சியை இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பிரசாந்த் கிஷார் அரசியல் பணி செய்ததாகவும், அவரின் அரசியல் ஐடியாக்கள் தோல்வியுற்றதாக கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் "நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது மட்டுமல்லாது இன்னும் ஆட்சி மாற்றத்திற்கு சில ஆண்டுகள் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என கூலாக ட்விட் செய்திருப்பதன் மூலம் இங்குள்ள தி.மு.க அதிர்ச்சியடைந்துள்ளது.

ஏனெனில் ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்று தி.மு.க சந்திக்க போகும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுதான் இந்த நிலையில் இதில் தோல்வியை தி.மு.க தழுவினால் கண்டிப்பாக தி.மு.க'வை காப்பாற்ற இயலாது ஏற்கனவே தி.மு.க'வில் ஸ்டாலின் தலைமை மேல் உடன்பிறப்புகளே சந்தேகம் கொள்ளும் நிலையில் தற்பொழுது "தோற்றால் சில ஆண்டுகள் கழித்து பார்த்து கொள்ளலாம்" என்கிற ரீதியில் பிரசாந்த் கிஷோர் இருப்பது சரியல்ல என்றும், இதே அலட்சிய பதிலை தி.மு.க தோற்றால் அப்பொழுது பிரசாந்த் கிஷோர் கூலாக கூறிவிட்டால் என்ன செய்வது எனவும் அறிவாலய வட்டாரம் தலையில் கைவைத்து கொண்டு புலம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News