கொரோனா பாதிப்பு! அமைச்சர் காமராஜ் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்!
கொரோனா பாதிப்பு! அமைச்சர் காமராஜ் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
திருவாரூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பணம், கரும்பு உள்ளிட்டவற்றை வழங்கினார். இதன் பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இதில் கொரோனா இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 வாரங்களுக்கு மேலாக சகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் அங்கு இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், தற்போது அமைச்சர் காமராஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதன் பின்னர் மீண்டம் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.
ஏற்கெனவே வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மற்றொரு அமைச்சருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது அ.தி.மு.க தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.