பிரச்சாரத்திற்கு சென்ற தி.மு.க., எம்.பி.க்கு கொரோனா.. அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்.!
பிரச்சாரத்திற்கு சென்ற தி.மு.க., எம்.பி.க்கு கொரோனா.. அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்.!
By : Kathir Webdesk
சேலம் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்கள் அரசு கூறிய நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் புதிதாக 945 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,17,077 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி எம்.பி., பார்த்திபன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., சேகர் பாபு மற்றும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் எம்.பி.,க்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்படி வந்துவிட்டதே என புலம்பி வருகின்றனர்.