தி.மு.க., முதன்மைச் செயலாளர் நேருவுக்கு கொரோனா.. அவசரமாக சென்னையில் அட்மிட்.!
தி.மு.க., முதன்மைச் செயலாளர் நேருவுக்கு கொரோனா.. அவசரமாக சென்னையில் அட்மிட்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தேர்தல் பணிகள் மிக தீவிரம் அடைந்து வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் அரசியல் கூட்டங்களுக்கு அரசு தமிழக அரசு அனுமதித்திருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் தேர்தல் களப்பணி தீவிரமடைந்திருக்கும் சூழலில், திமுக தலைமை நடத்திய அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும் கே.என்.நேரு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருவுக்கு கொரோனா என்று கேள்விப்பட்டதும் உடன் பிறப்புகள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிக்க தொடங்கி விட்டனர்.