உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்.!
உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்.!
By : Kathir Webdesk
உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது.
நேற்றைய நிலவரப்படி 820 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 8,22,370 ஆக உள்ளது. அதேபோன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,177 ஆக உயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு வந்தார். அதே போன்று திருவாரூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.