தடுப்பூசி போடுவதற்கு கட்சிக்காரர்களுக்கு மட்டுமே டோக்கன்: பெரியகுளம் தி.மு.க. நகர செயலாளர் அட்டூழியம்.!
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் திமுக கட்சி காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் திமுக கட்சி காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதனை சமாளிப்பதற்காக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அதில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
அதே போன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் பெரியகுளம் நகராட்சி இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் தடுப்புசி மையம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ., சரவணகுமார் துவக்கி வைத்துவிட்டு சென்றவுடன், பெரியகுளம் திமுக நகர செயலாளர் முரளி என்பவர் சொந்த கட்சிக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து டோக்கன் விநியோகம் செய்து வந்தார். டோக்கனை வாங்குவதில் திமுகவினர் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர். தடுப்பூசி போடுவதற்காக கால் கடுக்க நின்ற பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆட்சிக்கு வந்த ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பொதுமக்களை துன்புறுத்தும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.