Begin typing your search above and press return to search.
ஊழல் வழக்கு: திமுகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை!
திமுகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது.

By :
திமுகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1991 மற்றும் 96 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக்கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடம் ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில்தான் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு, சண்முகம் ஆகியோர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai
Next Story