ஊழலில் ஊறிப்போன கட்சினா தி.மு.க.தான்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களின் பரிசீலனை இன்று முடிந்தது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களின் பரிசீலனை இன்று முடிந்தது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், அ.தி.மு.க. கூட்டணி திறமையான கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும். திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கான அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும், ஊழல் பத்தி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை. ஊழலில் ஊறிப்போன கட்சி என்றால் அது திமுக மட்டும்தான் என்று கூறினார்.