Kathir News
Begin typing your search above and press return to search.

கூட்டணியில் விரிசல்? தனியாக போட்டியிடும் காங்கிரஸ்.!

கூட்டணியில் விரிசல்? தனியாக போட்டியிடும் காங்கிரஸ்.!

கூட்டணியில் விரிசல்? தனியாக போட்டியிடும் காங்கிரஸ்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  22 Nov 2020 12:45 PM IST

சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், இடைத் தேர்தல் முடிவும் வந்து காங்கிரஸிற்கு அதிர்ச்சி அளித்தது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்த சிவசேனா, பா.ஜ.கவை விட மிக குறைவான, கிட்டத்தட்ட பாதி அளவு இடங்களை பெற்ற வெற்றி பெற்ற பிறகு, உத்தவ் தாக்கரே முதல்வராக வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல ஆண்டுகால பா.ஜ.க கூட்டணியை உதறித்தள்ளிவிட்டு எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் (NCP) மற்றும் காங்கிரஸுடன் முற்றிலும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து அதற்கு மகா விகாஸ் அகாதி (MVB) எனப் பெயர் வைத்தது.

உத்தவ் தாக்கரே ஆட்சி பொறுப்பேற்ற தினத்திலிருந்து கொரானா வைரஸ், சுஷாந்த் சிங் மரணம், அர்னாப் கோஸ்வாமி கைது என பிரச்சனை மேல் பிரச்சனைகளை அனுபவமில்லாத உத்தவ் தாக்கரே அரசாங்கத்தால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு மின் கட்டணத்தில் சலுகையை வழங்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை சிவசேனா நிராகரித்தது கூட்டணிக் கட்சியான காங்கிரசில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதித்துறைக்கு பலமுறை இத்திட்டத்தினை அனுப்பிவைத்தும் அவர்கள் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இதைக் காரணமாகக் காட்டி அம்மாநிலத்தில் உள்ள ஒரே எதிர்க்கட்சியான பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் 2022 வருட ஆரம்பத்தில் நடைபெற உள்ளன. இதில் சிவசேனா வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனியாக நிற்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தேவையற்ற கருத்துக்களை பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதற்கு பெயர் போனவர். அவர் அங்கு மகா விகாஸ் அகாதி அடுத்த 25 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சி புரியும் என கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.

ஆனால் பல அரசியல் விமர்சகர்கள் வரவிருக்கும் பிர்முஹன் மும்பை சிவிக் (BMC) தேர்தல்களுக்கு பின்னர் இந்தக் கூட்டணி நீடிக்காது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். 3 கட்சிகளாக சேர்ந்து BMC யை கைப்பற்றலாம் என்ற சிவசேனாவின் கனவு தவிடுபொடியாகியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவிராஜா சிவ சேனாவுடன் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து சிறிது பின்னணியை அறிந்து கொள்வது நாம் அவசியம். BMC நாட்டின் பணக்கார கார்பரேஷங்களில் ஒன்றாகும். இது 2022 ஆரம்பத்தில் தேர்தலில் செல்ல இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்பை சிவசேனா தடையின்றி ஆட்சி செய்து வருகிறது. அப்போதைய தேவேந்திர பாட்னவிஸ் அரசாங்கத்தில் கூட்டணியில் இருந்த சிவசேனா, 2017இல் பா.ஜ.கவிற்கு குறைவான சீட்டுகளை மட்டுமே ஒதுக்க ஒப்புக்கொண்டதால் கூட்டணியை விட்டு இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்டன.

மும்பையை தங்களது கோட்டையாக கருதும் சிவசேனாவின் கனவுகளை பொடிப்பொடியாக்கி பா.ஜ.க 227 இடங்களில், 82 இடங்களைப் பெற்றது. சேனா 86 இடங்களைப் பெற்றது. இது மும்பை அரசியலில் ஒரு முக்கியமான தருணம். ஏனெனில் நகரத்தின் மீது இருந்த சிவசேனாவின் இரும்புப் பிடியை பா.ஜ.க தளர்த்த தொடங்கியது. பா.ஜ.கவின் ஆதரவின்றி சிவசேனா வால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றானது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-NCP 15 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி புரிந்த போதும் சிவசேனாவை ஒரு கட்சியாக அரசியல் நீரோட்டத்தில் தொடர்ந்து வைத்திருந்தது மும்பை கார்ப்பரேஷன் தான்.

தேவேந்திர பட்னாவிஸ் கீழிருந்த மகாராஷ்டிர பா.ஜ.க தாங்கள் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிகளை தட்டிச்சென்றது. பா.ஜ.க முன்பு இல்லாத கிராமப்புற பகுதிகளில் கூட ஊடுருவியது. தற்போது BMC தேர்தல்களில் தனியாக நிற்கப் போவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தனியாக போட்டியிடுவதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று சிவசேனாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் தங்களுடைய ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்துவதற்காக சிவசேனா சில இடங்களை மட்டுமே காங்கிரஸிற்கு கொடுக்கும்.

இது காங்கிரசிற்கு ஒத்துவராது. இரண்டாவது, ஏற்கனவே மக்கள் மத்தியில் சிவசேனாவுக்கு சரிந்து வரும் செல்வாக்கு பற்றி காங்கிரஸ் அறிந்திருப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டது சமம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தங்களுடைய வாக்கு வங்கியை இழக்கும் அபாயத்தில் சிவசேனா இருந்தது. இந்த நிலையில் காங்கிரசின் மைனாரிட்டி ஓட்டுகள் சிவசேனாவுக்கு கிடைத்து இழந்ததை சமன்படுத்தும் என நம்பப்பட்டது. காங்கிரஸ் தனியாக செல்ல முடிவெடுத்திருப்பதால், பா.ஜ.க, காங்கிரஸ் என இரு கட்சிகளையும் தனியாக நின்று எதிர்த்துப் போராட வேண்டிய கட்டத்திற்கு சிவசேனா தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையை சிவசேனா இழக்க நேரிட்டால், அது அவர்களின் மோசமான கனவாகவே இருக்கும். ஏனெனில் அதன் பிறகு மகா விகாஸ் அகாதிக்குள் பிளவு ஏற்படும். அப்படி பிளவு ஏற்படும் பட்சத்தில் மஹாராஷ்டிரா ஆட்சியையும் இழந்து, BMC யையும் சிவசேனா இழக்க வேண்டி இருக்கும். இவ்வளவு தகிடுதத்தங்களுக்கு பிறகு சிவசேனா சாதிக்க முடிந்த விஷயம் உத்தவ் தாக்கரே சிலகாலம் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தார் என்பதாகத் தான் இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News