லஞ்சம் இல்லாத துறை உருவாக்க வேண்டும்.. கமல் பேட்டி.!
லஞ்சம் இல்லாத துறை உருவாக்க வேண்டும்.. கமல் பேட்டி.!
By : Kathir Webdesk
ஜனவரியில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில், திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜனவரி மாதம் யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என அறிவிப்போம்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள லஞ்சத்தின் விலைப்பட்டியல் இங்கே உள்ளது. தொட்டில் முதல் சுடுகாடு வரைக்கும் லஞ்சம் தொடர்கிறது. பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், குடும்ப அட்டை, இடம் பதிவு, பட்டா பரிவர்த்தணை, சொத்துவரி, மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு, விதவை உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் பெறப்படுகிறது. தமிழகத்தில் லஞ்சம் இல்லாத் துறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.