முதலமைச்சரை பற்றி விமர்சனம்.. ராசா மீது பாய்ந்த வழக்கு.!
முதலமைச்சரை பற்றி விமர்சனம்.. ராசா மீது பாய்ந்த வழக்கு.!
By : Kathir Webdesk
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக விமர்சனம் செய்த புகாரில் திமுக எம்.பி. ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக எம்.பி., ஆ.ராசா அவதூறாக பேசினார். இவரது கருத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கடும் கண்டனங்களை தெரிவித்தார். அவர் மட்டுமின்றி மற்ற அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சரை அவதூறாக பேசிய ராசா மீது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் 153,(505)(1)பி பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.