Kathir News
Begin typing your search above and press return to search.

தொழிலாளியை அடித்துக் கொன்ற தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு: போலீசாருக்கு பயந்து தலைமறைவு!

முந்திரி தொழிற்சாலையில் ஊழியரை அடித்துக் கொன்றதாக கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தொழிலாளியை அடித்துக் கொன்ற தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு: போலீசாருக்கு பயந்து தலைமறைவு!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 Oct 2021 3:46 AM GMT

முந்திரி தொழிற்சாலையில் ஊழியரை அடித்துக் கொன்றதாக கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 19ம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. அப்போது அவரது மகனுக்கு உயிரிழந்த தகவல் மட்டும் போன் மூலமாக ரமேஷின் உதவியாளர் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் உறவினர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் கோவிந்தராஜின் உடலை பார்த்தனர். அப்போது அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்த காரணத்தினால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக எம்.பி. மற்றும் அவரது ஆட்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கு பதிவு செய்யும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டர் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் திமுக தலைமை கடும் அதிருப்திக்கு ஆளானது. இது பற்றி உயிரிழந்த அடுத்த நாள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக வக்கீல் பாலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜின் உடலை ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதனிடையே இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கடலூர் எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் எம்.பி. ரமேஷை தவிர மற்ற 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனால் பதற்றம் அடைந்த எம்.பி. தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் என்று பாமகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பிரதிநிதி ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றார் என்றால் வாக்களித்த மக்களுக்கு எப்படி இந்த சமூதாயத்தில் பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Tamil Samayam


Next Story
கதிர் தொகுப்பு
Trending News