கொலை வழக்கில் போலீசுக்கு பயத்து பதுங்கிய தி.மு.க எம்.பியை விசாரணைக்கு காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி !
By : Mohan Raj
கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வளையத்திற்குள் வந்த தி.மு.க எம்.பி ரமேஷ்.
கடலூர் தி.மு.க எம்.பி ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த வழக்கினை தொடர்ந்து தி.மு.க எம்.பி போலீசுக்கு பயந்து தலைமறைவானார். இந்த நிலையில் போராட்டங்கள் வலுக்கவே கடந்த 11'ம் தேதி போலீசுக்கு பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் ரமேஷ் எம்.பி. சரணடைந்தார். சரண் அடைந்த ரமேஷ் எம்.பி'யை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேஷ் எம்.பியை தங்கள் வசம் எடுத்து 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் எம்.பி.யிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 1 நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.