சேலத்துக்கு பாரீன் காரில் போன தயாநிதி.. திரும்ப சென்னைக்கு ரயில்ல ஓட விட்ட பா.ம.க., தொண்டர்கள்.. என்ன நடந்துச்சி.!
சேலத்துக்கு பாரீன் காரில் போன தயாநிதி.. திரும்ப சென்னைக்கு ரயில்ல ஓட விட்ட பா.ம.க., தொண்டர்கள்.. என்ன நடந்துச்சி.!
By : Kathir Webdesk
சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக எம்.பி., தயாநிதிமாறன் சென்னையில் இருந்து கார் மூலம் சேலத்திற்கு வந்திருந்தார். அப்போது ஓமலூர் தொகுதிகுட்பட்ட பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
அன்புமணியை வாங்க எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தயாநிதிமாறன் பேசியுள்ளார். இந்த பேச்சு சேலம் மாவட்டத்தில் உள்ள பாமகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து திமுக எம்.பி., தயாநிதிமாறன் கூட்டம் முடித்துக்கொண்டு சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் கார் மூலமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஓமலூர் பகுதியில் பாமக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்புமணி மற்றும் ராமதாஸ் பற்றி அவதூறான பேச்சை திரும்ப வாங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனை கண்டுக்காம சென்றார் தயாநிதிமாறன், இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் தயாநிதிமாறனின் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இதனால் பயந்துபோன தயாநிதிமாறன் காரில் இருந்து இறங்கி மற்றொரு கார் மூலம் சேலம் ரயில் நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். நேற்று நள்ளிரவு வரை சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பான காட்சிகளை பார்க்க முடிந்தது.