Kathir News
Begin typing your search above and press return to search.

ஜல்லிக்கட்டுக்கான தடையை 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி நீக்கினார்.. துணை முதலமைச்சர் பேச்சு.!

24 மணி நேரத்தில் 4 துறை அமைச்சர்களை அழைத்து உடனடியாக ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி அவசர சட்டம் பிறப்பித்தார். எனவே தமிழக மக்களின் மனதை பிரதமர் மோடி வென்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கான தடையை 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி நீக்கினார்.. துணை முதலமைச்சர் பேச்சு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 March 2021 1:49 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தாராபுரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்று உரையாற்றினார்.

அதன் பின்னர் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அவர் பேசும்போது: திமுக, காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது. அப்போது அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தனர்.




அதற்கு காரணம் காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்கு பட்டியலில் சேர்த்து விட்டனர். இதனால் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தேன். உடனடியாக டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தமிழக நிலைமை குறித்து விளக்கினேன்.

அவர் இதனை ஏற்றுக்கொண்டு, 24 மணி நேரத்தில் 4 துறை அமைச்சர்களை அழைத்து உடனடியாக ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி அவசர சட்டம் பிறப்பித்தார். எனவே தமிழக மக்களின் மனதை பிரதமர் மோடி வென்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





எனவே திமுக, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நிராகரிக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமகா, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு தங்களின் வாக்குகளை செலுத்துங்கள் எனக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News