உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுங்கள்.. ரஜினிக்கு அட்வைஸ் பன்ன தமிழருவி மணியன்.!
உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுங்கள்.. ரஜினிக்கு அட்வைஸ் பன்ன தமிழருவி மணியன்.!
By : Kathir Webdesk
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் கடந்த திங்கள் அன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து மிக விரைவில் அறிவிப்பதாக சொல்லியிருந்தார். இந்த சந்திப்புக்கு பின்பு பேசிய மாவட்ட நிர்வாகிகளும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நடிகர் ரஜினியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது 2 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது.
இதனிடையே பத்திரிகையாளரை சந்தித்த அவர், ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கு தான் தெரியும். உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியுடன் நான் கூறியுள்ளேன். நானும் அவரும் இந்த சந்திப்பின்போது என்ன பேசினோம் என்பதை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.