தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லையாம்.. இந்துக்களை வம்புக்கு இழுக்கும் தி.க. கூட்டம்.!
தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லையாம்.. இந்துக்களை வம்புக்கு இழுக்கும் தி.க. கூட்டம்.!
By : Kathir Webdesk
தீபாவளி அவசியமா என்பது பற்றி தீபாவளி சித்தாந்தமும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் திகவை சேர்ந்த சுப.வீரபாண்டியன் வெளியிட்ட வீடியோ இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பண்டிகையான தீபாவளி நவம்பர் 14ம் தேதி அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாடினர். இதனை கொரோனாவுக்கு இடையிலும் தமிழகத்தில் உள்ள இந்துக்கள் மிக உற்சாகமாக கொண்டாடினார்கள். இதனை அனைத்து ஊடகத்திலும் ஒளிபரப்பியது. இந்த வீடியோவை தி.க. கூட்டமும் பார்த்து விட்டு தற்போது வயித்தெறிச்சலில் உள்ளனர் என்றே சொல்லலாம்.
தமிழக மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக திமுக ஆதரவாளரும் தி.க.வை சேர்ந்த சுப வீரபாண்டியன் தனது யூடியூப் பக்கத்தில் தீபாவளி சித்தாந்தமும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் தீபாவளித் திருநாள் என்பது தமிழர்கள் பண்டிகை அல்ல.. இது சமணர்கள் கொண்டாடிய பண்டிகை.. இந்த பண்டிகையை இந்துக்கள் பண்டிகையாக மாற்றிக் கொண்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும், இது சமணர்களின் ஸ்ரீபுராணம் நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் அதாவது பனிக்காலம் தொடங்கியதை கொண்டாடும் விதமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நரகாசுரனை அழிக்கப்பட்ட நாள் தான் தீபாவளி என்பதற்கான குறிப்பு எதுவும் எந்த நூலிலும் இல்லை. தீபாவளி குறித்து பல்வேறு தகவல்களை அவர் பேசியுள்ளார். இதற்கு அரசியல் விமர்சகர் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக சுப வீரபாண்டியன் பேச்சு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.க., மற்றும் திமுகவிற்கு இந்துக்கள் அனைவரும் சேர்ந்து இந்த தேர்தலோடு விரட்டி அடிப்பார்கள். இது நிச்சயமாக நடக்கும் என்று அனைத்து இந்து ஆதரவாளர்கள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.