Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பரம்: பா.ஜ.க. எதிர்ப்பை தொடர்ந்து 2 கோயிலை இடிக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்ட அரசு!

சிதம்பரத்தில் கோயில்களை இடித்து அப்புறப்படுத்தக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக அரசு கைவிட்டுள்ளது.

சிதம்பரம்: பா.ஜ.க. எதிர்ப்பை தொடர்ந்து 2 கோயிலை இடிக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்ட அரசு!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Nov 2021 1:55 PM IST

சிதம்பரத்தில் கோயில்களை இடித்து அப்புறப்படுத்தக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக அரசு கைவிட்டுள்ளது.

சிதம்பரம் கீழ் வீதியில், வீர சக்தி ஆஞ்சநேயர் கோயில் மற்றும் தான் தோன்றி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் சாலை விரிவாக்கம் காரணமாக நீதிமன்றத்தில் இடிப்பதற்கு அனுமதி வாங்கியது. இதனையடுத்து கோயிலை இடிப்பதற்கான நோட்டீஸை கோயில் நிர்வாகத்தினருடன் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இது பற்றிய தகவல்களை அறிந்த பாஜகவினர், இந்து முன்னணியினர், அகில பாரத இந்து மகா சபா, விஷ்வ இந்து பரிஷத் நேற்று (நவம்பர் 16) உள்ளிட்ட இயக்கங்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயிலை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. அதற்காக பாஜக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் சிதம்பரம் நகரத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பாதிப்பு வந்துவிடும் என்ற பயத்தில் அரசு கோயிலை இடிக்கும் பணியை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக நோட்டீஸ் வழங்கியுள்ளது.


இது தொடர்பாக சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் வட்டம், சிதம்பரம் கீழ் ரதவீதியில் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் தான் தோன்றி விநாயகர் ஆலயம் இரண்டையும் 17.11.2021 அன்று அகற்றுவதாக நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக, விஷ்வ இந்து பர்ஷித், இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிதம்பரம் பொதுமக்கள் தலைமையில் 16.11.2021 மற்றும் 17.11.2021 இரண்டு நாட்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 16.11.2021 அன்று காலை 10 மணியளவில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர், சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் மற்றும் தமிழ்நாடு பாஜக, விஷ்ய இந்து பர்ஷித், இந்து முன்னணி, சிதம்பரம் பொதுமக்கள், அகில பாரத இந்து மகா சபா மற்றும் இரண்டு கோயில் நிர்வாகிகள் சுமார் 15 நபர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானம், தமிழ்நாடு பாஜக, விஷ்வ இந்து பர்ஷித், இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிதம்பரம் பொதுமக்கள், இரண்டு கோயில் நிர்வாகிகள் மூலம் இரண்டு கோயில்களையும் அகற்றும் நடவடிக்கையிலிருந்து ஒன்பது மாதம் காலஅவகாசம் கோரப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக கோயில்களை அகற்றும் நடவடிக்கையிலிருந்து 3 மாத காலஅவகாசம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிதம்பரம் வட்டாட்சியர் அவர்களால் இரண்டு கோயில்களையும் அகற்றும் நடவடிக்கையிலிருந்து 9 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இக்கோரிக்கையை தமிழ்நாடு பாஜக, விஷ்வ இந்து பர்ஷித், இந்து முன்னணி அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிதம்பரம் பொதுமக்கள், மற்றும் இரண்டு கோயில் நிர்வாகிகள் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும் 16.11.2021 மற்றும் 17.11.2021 இரண்டு நாட்கள் நடைபெறுவதாக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது என மேற்கண்ட நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Govt Press Release

Image Courtesy:Asianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News