கோவையில் மழை நீர் தேக்கமும், டெங்கு கொசுக்களும் அதிகரிப்பு: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கொட்டும் மழையும், ஆங்காங்கே உருவாகும் குட்டைகளும், கொசுக்களை வளக்கும், நீர் ஆதாரங்களாக கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தோன்றியுள்ளன.
By : Thangavelu
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கொட்டும் மழையும், ஆங்காங்கே உருவாகும் குட்டைகளும், கொசுக்களை வளக்கும், நீர் ஆதாரங்களாக கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தோன்றியுள்ளன. இந்த நன்னீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் பெருமளவில் உருவாகிறது. இதனால், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கோவை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் தெரிகிறது. மேலும், கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 23 பேர் ஆளாகியுள்ளனர். மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், தகவல் தெரிவித்தாலும், உண்மையில் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 300 பேர்களுக்கும் மேல் இருப்பார்கள், மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆகவே, விரைந்து இதனை கட்டுப்படுத்தும் வகையில் நோய் தடுப்புப் பணிகளும், நோய் எதிர்ப்புப் பணிகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து, அங்கே கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகரில் மழை நீர் தேக்கமும்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 29, 2021
டெங்கு கொசுவின் தாக்கமும்
- மாநில தலைவர் திரு.@annamalai_k அறிக்கை#KAnnamalaiStatement pic.twitter.com/WECIvKkI3Z
சுற்று வட்டார பகுதிகளில் கொசு உற்பத்தியாகாத வகையில் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால், நகர, கிராமப்புறங்களில், கொசு மருந்து தெளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். தொடர் மழை பெய்து, ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter