தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலையில், வெளியே கடந்த சில நாட்களாக வராமல் இருந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று இரவு திருப்பதிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவர் விஜபி தசினத்தில் காலையில் ஏழுமலையானை வழிப்பட்டார். திருப்பதிக்கு வந்திருந்த துணை முதலமைச்சருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவருக்கு பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ் அது பற்றி எதுவும் பேசாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.