3 மாதங்களில் தருமபுரியில் வேளாண் கல்லூரியை கொண்டு வந்துள்ளேன்.. அமைச்சர் கே.பி.அன்பழகன்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் களை கட்ட தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் களை கட்ட தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
வடமாவட்டங்களில் பாமகவுக்கு என்று வாக்கு வங்கி கூடுதலாகவே உள்ளது. இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதனிடையே தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இந்த பரப்புரையானது பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, அடிலம், கோவிலூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பொதுமக்களிடம் அமைச்சர் பேசும்போது: 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் அம்மா மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா சொன்ன அனைத்து வாக்குறிகளையும் நிறைவேற்றி விட்டார். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் நமது மாவட்டத்திற்கு சிப்காட் கொண்டு வந்துள்ளார்.
மேலூம் திறந்த வெளி பல்கலைக்கழகம், அரசு கலைக்கல்லூரி போன்ற நிறைய திட்டங்களை செய்துள்ளார்.
அதே போன்று நான் வேளாண்மைத்துறை அமைச்சராக பதிவியேற்ற மூன்று மாதங்களில் வேளாண்மை கல்லூரி தருமபுரி மாவட்டத்திற்கு வேண்டும் என்று சொன்னேன், உடனடியாக வேளாண்மை கல்லூரி அமைத்து தந்துள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.