தருமபுரி: 15 கிலோ மீட்டர் நடந்து சென்று மலை கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்த பா.ம.க. எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன்.!
தருமபுரி தொகுதிகுட்பட்ட மலை கிராமத்தினரின் குறைகளை கேட்டறிவதற்காக பாமக எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் 15 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
By : Thangavelu
தருமபுரி தொகுதிகுட்பட்ட மலை கிராமத்தினரின் குறைகளை கேட்டறிவதற்காக பாமக எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் 15 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
தருமபுரி மலை கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டம் ஆகும். சில மலைக்கிராமங்களுக்கு மட்டும் சாலை வசதி உண்டு, சில கிராமங்களுக்கும் இன்றும் நடந்து செல்லும் நிலைதான் தொடர்கிறது. அந்த வகையில், தருமபுரி தொகுதிகுட்பட்ட மிட்டாரெட்டி அள்ளி பஞ்சாயத்து, கோம்பேரி, கெஜமான்குட்டை, வாழமரத்துகுட்டை, ஒட்டன்கொள்ளை, பையன்குட்டை, மல்லங்கொள்ளை ஆகிய மலை கிராமங்களில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த தருமபுரி பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் நடந்தே சென்று அக்கிராமத்தில் உள்ள மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். கிராம மக்களுக்கு தற்போது சாலை வசதி தேவையன கூறியுள்ளனர். மேலும், குடிப்பதற்கு தண்ணீர் வசதி வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என எம்.எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
இந்த ஆலோசனையின் போது பாமக மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.