வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சில விஷமிகள் தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.